சேலம்: தடையை மீறி வீரபாண்டி ஆறுமுகம் சிலையை திறந்த தி.மு.க., பொருளாளர்
ஸ்டாலின் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது சேலம் மாநகர போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர். சேலத்தில் மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிலையை திறக்க
தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி தி.மு.க., பொருளாளர்
ஸ்டாலின் சிலையை இன்று மாலை திறந்தார். இதையடுத்து, போலீஸ் உத்தரவை
மீறியதாக ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி., செல்வ கணபதி, ராஜேந்திரன், ராஜா
உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை
கைது செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Comments