கோச்சடையான், விஸ்வரூபம்-2, அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது?

கோச்சடையான், விஸ்வரூபம்-2, அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது?சென்னை: இனி தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வரி விலக்கு ததருவதில்லை என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளியான ஜில்லா, வீரம் படங்களுக்கே கடைசி நேரம் வரை வரிவிலக்கு தராமல் இருந்தது தமிழக அரசு. காரணம், பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் எப்படி இருந்தாலும் போட்ட பணத்தை விட அதிகமாகவே வசூல் செய்துவிடுகின்றன. காரணம், அந்தப் படங்களுக்கு கிடைக்கும் ஒரு வார கால ஓபனிங்.

அதுபோதாது என்று அரசாங்கம் கொடுக்கும் 30 சதவீத வரிவிலக்கும் அவர்களுக்கு கூடுதல் லாபமாகக் கிடைத்துவிடுகிறது. இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இனி சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கொடுக்கலாமா? என அரசு யோசனை செய்து வருகிறதாம். இனி வெளிவரவிருக்கும் 'கோச்சடையான்', 'விஸ்வரூபம்-2', 'ஐ', அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு இனி வரிச்சலுகை தருவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Comments