அடேங்கப்பா.. எம்பூட்டு
மிஸ்டியின் மும்பை ஓஷிவாராவில் உள்ள மீரா டவர் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட
25,000 ஆபாச சிடிக்களை சமீபத்தில் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பா, சகோதரன் கைது
அத்தனையும் படு ஆபாசமான படங்கள் அடங்கிய வீடியோ சிடிக்கள் ஆகும்.
இதுதொடர்பாக மிஸ்டியின் அப்பா மற்றும் சகோதரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அது நான் இல்லீங்க...
ஆனால் இந்த சிடிக்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று மிஸ்டி
மறுத்துள்ளார். தாங்கள் ஆபாச சிடிக்களை விற்பதில்லை என்றும் அவர்
புலம்புகிறார்.
வேலைக்காரப் பெண்கள்தான் காரணம்
இதுகுறித்து அவர் கூறுகையில், என் வீட்டில் வேலை பார்த்து வந்த நான்கு
வேலைக்காரப் பெண்கள்தான் இதற்குக் காரணம். அவர்கள்தான் இந்த சிடிக்களைப்
போட்டு எங்களை மாட்டி விட்டுள்ளனர் என்றார்.
கோவா போயிருந்தபோது
மேலும் அவர் கூறுகையில், நானும் எனது குடும்பத்தினரும் கோவாவுக்கு
புத்தாண்டு கொண்டாடப் போயிருந்தபோது அந்த வேலைக்காரப் பெண்கள் இந்த சதி
வேலையைச் செய்துள்ளனர். அவர்கள் பணத்தையும், நகையையும் கூட திருடிச் சென்று
விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சமாகும்.
வீடு முழுக்க சிதறிக் கிடந்தது
நாங்கள் கோவா போய் விட்டு வீடு திரும்பியபோது வீடு முழுவதும் எங்களது
பொருட்கள் சிதறிக் கிடந்தன. லாக்கரை பார்த்தபோது அதில் இருந்த ரூ. 1 லட்சம்
மதிப்புள்ள நகை, பணம் திருடு போயிருந்தது. எங்களது வீட்டில்
வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் எதுவும் பதிவாகவில்லை. என்றார்.
என் வீட்டிலேயே ரெய்டு நடத்திய போலீஸ்
இந்த சம்பவம் தொடர்பாக நான் ஓஷிவாரா போலீஸில் புகார் கூறச் சென்றேன். ஆனால்
வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினர். ஆபாச சிடிக்கள் இருந்ததாக கூறி
வழக்குப் போட்டு விட்டனர். இது அனைத்துமே சதி வேலையாகும் என்று குமுறினார்
மிஸ்டி.
சகோதரனின் கலெக்ஷனாம்
இதற்கிடையே, நடிகை வீட்டில் சிக்கிய ஆபாச சிடிக்கள் அனைத்தும் அவரது
சகோதரன் சேகரித்து வைத்திருந்த சிடிக்களாம். ஆனால் தான் போட்டுப் பார்க்க
மட்டுமே அதை சேகரித்ததாகவும், விற்கவில்லை என்றும் அவர் போலீஸில்
தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடமாக இப்படி சிடிக்களை கலெக்ட் செய்து
வருகிறாராம் அந்த சகோதரன்....
Comments