
போர்ட் பிளேர்: காஞ்சிபுரத்திலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா
சென்றிருந்த 30க்கும் மேற்பட்டோர் சுற்றுலாவாக சென்ற படகு நடுக் கடலில்
கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
அந்தப் படகில் அளவுக்குஅதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதால்தான் இந்த
கோர விபத்து நடந்துள்ளது.
ராஸ் தீவுக்கும், நார்த் பே என்ற இடத்துக்கும் இடையே இந்த விபத்து
நடந்துள்ளது.
படகில்இருந்தவர்கள் அனைவரும் காஞ்சிபுரத்திலிருந்து அந்தமானுக்கு
வந்திருந்தவர்கள் ஆவர்.
இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை நான்கு மணியளவில்இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங் கூறுகையில்,
மீட்புப் பணிகள் போர்க்காலஅடிப்படையில் நடந்து வருகின்றன. உயிருடன்
மீட்கப்பட்டவர்கள் போர்ட்பிளேரில்உள்ள ஜி.பி.பந்த்
மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
விபத்தில் சிக்கிய அக்வா மெரைன் என்ற அந்தப் படகில் அதிகபட்சம் 25 பேர் வரை
மட்டுமே ஏற்றலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகஆட்களை ஏற்றியதால் பாரம் தாங்க
முடியாமல்அது கடலில்கவிழ்ந்து விட்டது.
இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடு
வழங்கவும் அந்தமான் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அதிர்ச்சி - இரங்கல்
படகு விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அழ்ந்த அதிர்ச்சியும்,
இரங்கலும் தெரிவித்துள்ளார்.
Comments