2014-ம் தேர்தலில் காங்., காணாமல் போகும்: கெஜ்ரிவால்

புதுடில்லி: 2014-ல் நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜ.,வுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே தான் நேரடி போட்டி என புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காணாமல் போகும்:

வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள பொது தேர்தலில் பா.ஜ.,வுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே தான் நேரடி போட்டி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுடன் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும்.
நாட்டு மக்களிடையே தற்போதைய சூழ்நிலையில் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. ஒன்று பா.ஜ., மற்றொன்று ஆம் ஆத்மி . பா.ஜ., தற்போது கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை போன்று நாடு முழுவதும் ஊழல் புரிந்த தலைவர்களை மீண்டும் தன்னுடன் இணைத்து கொள்கிறது. அதே சமயம் ஆம் ஆத்மி தன்னுடைய உயர்வான கொள்கைகளால் மக்களை கவர்ந்து வருகிறது என கூறினார்.


உறுப்பினர் சேர்க்கை தீவிரம்:

வரும் லோக்சபா தேர்தலுக்குள் மிகப்பெரிய அளவில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆம் ஆத்மியின் தொண்டர்கள் வித்தியாசமான வழியில் பணியாற்றிவருகின்றனர். இதன் காரணமாக இந்த தேர்தலோடு காங்கிரஸ் காணாமல் போய்விடும்.என அவர் தெரிவித்தார்.

Comments