புனே: மகாராஷ்டரா மாநிலம் புனே மாநகராட்சி கோட்ட கமிஷனர் பிரபாகர்
தேஷ்முக். ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்
கூறப்பட்டு வந்தது. இது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் இவரது
சொத்து விவரங்கள் கேட்டு மனு செய்யப்பட்டது.
அந்த விவரங்கள் வாயிலாக ,
ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேஷ்முக், தனது நண்பரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில்
பங்குதாரராக இருந்து 300 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதும், மேலும் கணக்கில்
வராத ரூ. 200 கோடி அளவிற்கு அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதும்
தெரியவந்தது.
Comments