புதுடில்லி: பொதுமக்கள், 2005ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை,
வங்கிகளில் கொடுத்து இப்போதே மாற்றி கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி,
அறிவித்துள்ளது.
2005ம் ஆண்டிற்கு பின், வெளியிடப்படும் ரூபாய்
நோட்டுகள், மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்படுகின்றன. மேற்கண்ட
ஆண்டிற்கு, பின் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் பின்புறம்,
அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
இரு தினங்களுக்கு முன்,
ரிசர்வ் வங்கி, 2005ம் ஆண்டிற்கு முன்பாக அச்சிடப்பட்ட நோட்டுகளை, ஏப்ரல்
1ம் தேதி முதல், பொதுமக்கள், வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என,
அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்போதிலிருந்தே இது போன்ற நோட்டுகளை
மாற்றி கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது. தற்போது, 2005ம்
ஆண்டிற்கு முன், அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் புழக்கம் மிகவும் குறைந்த
அளவில் தான் உள்ளது. புழக்கத்தில் உள்ள பழைய நோட்டு களை திரும்பபெறுவது
என்பது, சர்வதேச அளவில் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். எனவே, இதுகுறித்து
பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். ஜூலை 1ம் தேதிக்கு பிறகும்,
வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை வாயிலாக, இது போன்ற
ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி அதன் அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
Comments