கோவை: "தமிழ்நாடு முழுவதும் 200 டீக்கடைகளுக்கு மோடி பெயர் சூட்டப்படும்,' என நமோ பேரவையினர் தெரிவித்தனர்.
2014
லோக்சபா தேர்தலில், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை பிரதமராக்க,
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கட்சி சார்பற்றவர்கள்
ஒருங்கிணைந்து "நமோ' பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதற்காக இணைய
தளத்தை உருவாக்கி, உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
இது
குறித்து, "நமோ' பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன் சீனிவாசன், வினோத்
அகல்ராஜ் கூறியதாவது: மோடியை பிரதமராக்க, பொதுமக்கள் மத்தியில்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இப்பேரவை ஆரம்பிக்கப்பட்டது. இணைய
தளம் வாயிலாக, இது வரை, 2300 பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். வாகன
ஸ்டிக்கர், மொபைல் போன் ஸ்டிக்கர், அச்சடித்து கிராமங்கள் தோறும்
வினியோகித்து வருகிறோம். மோடி பெயரில், டீக்கடைகள் திறந்து வருகிறோம்.
தமிழகத்தில் முதன்முறையாக, டிச., 20ல் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில்,
"நரேந்திர மோடி தேனீர்க்கடை' திறக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும்,
200 டீக்கடைகளுக்கு, மோடி பெயர் சூட்டப்பட உள்ளது. இதற்கு அந்தந்த டீக்கடை
உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அந்த டீக்கடைகள் வாயிலாக மோடியின்
கொள்கை, செயல்பாடு,நாட்டிற்கு தேவையான மாற்றம் குறித்த துண்டு பிரசுரம்
விநியோகிக்கப்படும். டீக்கடைகளுக்கு பெயர் மாற்றுவது போல, மளிகை
கடைகாரர்களும், மோடி பெயரை வைக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். மேலும்,
மோடியின் கொள்கைகளை, இசை மூலமாக, மக்களிடம் கொண்டு செல்ல, "நமோகீதம்' என்ற
பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி., தமிழகம் முழுவதும் வெளியிடப்படும். இசை
வெளியீடு அறிமுக விழா, கோவை ராமநாதபுரம் எஸ்.என்.அரங்கில் வரும் 5ம் தேதி(
நாளை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Comments