புதுடில்லி: அதிக ஊழல் வாதிகள் கொண்டது இந்தியா தான் என்றும், இதில் 169
பேர் ஊழல்வாதிகள் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் ஆம்ஆத்மி
கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற டில்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் ஊழலில் சிக்கிய அரசியல்வாதிகள் பட்டியலை டில்லி முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டார்.
இதன் அடிப்படையில் ஊழல்வாதிகள்
மாநிலத்திற்கு ஒருவர் வீதம் இருந்தாலும், தமிழகத்தில் தான் 5 பேர் இடம்
பிடித்திருக்கிறார்கள்.
இன்று முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: நாட்டில் ஊழல் இல்லாத அரசியலை
உருவாக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலுக்கு பின்னர் ஒரு ஊழல்வாதிகூட
பார்லி.,க்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும், வரும்
தேர்தல், அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாகவும் அவர்
தெரிவித்தார்.
நாடு முழுவதும், ஆம் ஆத்மி சார்பில் 350 வேட்பாளர்கள் போட்டியிட களத்தில்
நிறுத்தப்படுவார்கள். குறிப்பாக அனைத்து (169 பேர்) ஊழல்வாதிகளுக்கும்
எதிராக எங்கள் கட்சி போட்டியிடும். இவர்களை எதிர்ப்பவர்கள் பலமானவராக
தேர்வு செய்யப்படுவர். மோடியும், ராகுலும், தங்களின் இமேஜை வளர்த்துக்
கொள்ள ரூ. 500 கோடி வரை செலவிடுகின்றனர். இவர்கள் இந்த பணத்தை திரும்ப
எடுக்க முயற்சிப்பர். எனவே இவர்கள் எவ்வாறு நல்ல அரசை தர முடியும் ?
நாட்டில் வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
கெஜ்ரிவால்
வெளியிட்ட ஊழல் அரசியல் தலைவர்கள் பெயர்கள்: ராகுல், நரேந்திரமோடி, வீரப்ப
மொய்லி, சுரேஷ்கல்மாடி, ஆனந்த்சர்மா, எடியூரப்பா, குமாரசாமி,
ஜெகன்மோகன்ரெட்டி, சல்மான்குர்ஷித், மாயாவதி, முலாயம்சிங், அணு டெண்டன்,
ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், அணுராக்தாக்கூர், பிரபுல்பட்டேல், கபில்சிபல்,
நிதின் கட்காரி, பரூக் அப்துல்லா, பவன்குமார் பன்சால், நவீண் ஷிண்டல்,
சரத்பவார், ஷிண்டே, தருண்கோகை, , அழகிரி, கனிமொழி, சிதம்பரம், வாசன், ராசா,
உள்ளிட்ட 169 பேர் அடங்குவர்.
Comments