விவசாய கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை
தொடங்கியவர் வி.குருநாதன்,75. 45 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை குத்தகைக்கு
எடுத்து வாழை சாகுபடி செய்தார். இன்று ஒரு எக்டேரில் 165 டன் வாழை
விளைச்சல் எடுத்துள்ளதால், உலகின் முதல் சாதனை வாழை விவசாயி என
தோட்டக்கலைத்துறை அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளார்.
நாடு முழுவதும்
இருந்து விஞ்ஞானிகள் இவரது தோட்டத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தற்போது, 150 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான இவர், முழு பரப்பிலும் ஜி 9
திசு வாழை சாகுபடி செய்து வருகிறார்.
குருநாதன் கூறியதாவது:
1990ம் ஆண்டு 13 ஆயிரம் வாழைத் தார்களை 16 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு
விற்பனை செய்தேன். அப்போது, இது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது.
இப்போது, 8500 வாழைத்தார்களை 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளேன்.
இதனை மிகப்பெரிய சாதனை, என தோட்டக்கலைத்துறையினர் கூறுகின்றனர். இப்போது,
என் நிலத்தில் எக்டேருக்கு 165 டன் வாழை விளைச்சல் எடுத்து வருகிறேன்.
ஆனாலும் தோட்டக்கலைத் துறையினர் சராசரியாக கணக்கிட்டு 150 டன் மதிப்பீடு
செய்து, இதனையே உலக சாதனை என்கின்றனர். 150 ஏக்கரிலும், சொட்டுநீர் பாசனம்
அமைத்துள்ளோம். இவ்வாறு கூறினார்.
Comments