மானிய சிலிண்டர் எண்ணிக்கை 12 ஆகிறது மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

புதுடில்லி : ''மானிய விலை காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை, ஒன்பதிலிருந்து, 12 ஆக அதிகரிப்பது குறித்து, மத்திய அமைச்சரவை, இரண்டொரு நாளில் முடிவு செய்யும்,'' என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி கூறினார்.

பெட்ரோல் பங்க்களில், ஐந்து கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை, நேற்று டில்லியில் வீரப்ப மொய்லி துவக்கி வைத்தார்.
பின், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:மானிய விலையில் வழங்கப்படும், ஒன்பது சமையல் காஸ் சிலிண்டர்கள் போதாது என, துணைத் தலைவர், ராகுல் கூறிவிட்டார். இதை, 12 ஆக அதிகரிக்கும்படி, சமீபத்தில் நடந்த காங்., கமிட்டி கூட்டத்தில் வலியுறுத்தினார்.மேலும், பல்வேறு தரப்பில் இருந்தும் இது தொடர்பாக கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. மானிய சிலிண்டர் எண்ணிக்கையை, 12 ஆக உயர்த்தும்படி, மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை குறிப்பு அனுப்பபட்டுள்ளது.இன்னும் இரண்டொரு நாளில், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments