ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு, ஒன்பது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த வாரம், டில்லியில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும், 'சிலிண்டருக்கு உண்டான, மானிய பணத்தை, 'ஆதார்' அட்டையை பயன்படுத்தி, வங்கிக் கணக்கில் வாங்கிக் கொள்ளலாம் என்ற, மத்திய அரசின் கொள்கை, நடைமுறைக்கு ஒத்துவராது' என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, மானிய விலையில், வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதிலிருந்து, 12 ஆக உயர்த்தலாம் என, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள், பெட்ரோலிய அமைச்சகத்தில், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments