உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் பின்னி: டில்லி அரசுக்கு 10 நாள் கெடு

புதுடில்லி: டில்லியில் கெஜ்ரிவாலின் அரசை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கிய ஆம் ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ., பின்னி, தனது போராட்டத்தை 4 மணி நேரத்தில் வாபஸ பெற்றுக்கொண்டார். டில்லி கவர்னர் நஜீப் ஜங்க் மற்றும் அன்னா ஹசாரே ஆகியோர் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை,
பொது பிரச்னைகளின் அடிப்படையில் தொடர்வேன் எனவும், 10 நாட்களுக்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

Comments