சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, தி.மு.க., தலைவர்
கருணாநிதி வீட்டில், அவரது வாழ்த்தை பெறுவதற்காக, தொண்டார்கள், அதிகாலை
முதல் காத்திருந்தனர்.
காலை, 10:30 மணிக்கு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்
அவரது மனைவியுடன், கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து,
முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி பிரமுகர்கள்,
கருணாநிதியிடம் ஆசி பெற்றனர். அவர்களுக்கு, பொங்கல் பரிசாக, கருணாநிதி,
தலா, 10 ரூபாய் வழங்கி, வாழ்த்தினார். தேனாம்பேட்டை, தி.மு.க., பொருளாளர்
ஸ்டாலின் வீட்டில், தொண்டர்கள், அவரை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறினர்.
சி.ஐ.டி., காலனியில் உள்ள, கனிமொழி எம்.பி.,க்கு, பொங்கல் வாழ்த்து
தெரிவித்த, அவரது ஆதரவாளர்களுக்கு, வீட்டில், மதிய உணவு விருந்து
அளிக்கப்பட்டது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டி தலைவர் ஞானதேசிகன், தொண்டர்களுக்கு, பொங்கல் வாழ்த்து தெரிவித்து,
உற்சாகப்படுத்தினார்.
Comments