இன்று தேர்தல்:
இன்று நடைபெறும் புதுடில்லி சட்டசபைக்கான பொது தேர்தலில் பா.ஜ.,மற்றும்
அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியினர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் ஷீலா தீட்ஷித்தை எதிர்த்து பா.ஜ., வின்
ஹர்ஷவர்தன் போட்டியிடுகிறார். மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் சுமார் 810
வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர். இத் தேர்தலில் பா..ஜ., 66 இடங்களிலும் , காங்கிரஸ்
மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் 70 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.
இத் தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் 66லட்சம் பேர் ஆண்கள், 53 லட்சத்து 20 ஆயிரம் பேர் பெண்களாவர். 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் முதன்முறையாக யாருக்கும் வாக்களி்க்க விருப்பம் இல்லை என்பதனை தெரிவிக்கும் (நோட்டா) முறை பயன்படுத்தப்பட உள்ளது.
ஓட்டு சாவடிகளுக்கு பாதுகாப்பு:
இத்தேர்தலில் மொத்தம் 11 ஆயிரத்து 753 வாக்குசாவடிகள்
பயன்படுத்தப்படஉள்ளன. இதில் சுமார் 634 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக
கருதப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம்
கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர மத்தியதுணை
ராணுவப்படையினரின் 107 கம்பெனிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
தேர்தல் பணிகளை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கவனித்து
வருகி்ன்றனர்.
ஏற்காடு இடைத்தேர்தல்
: ஏற்காடு இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடப்பதையொட்டி, தொகுதி முழுவதும், 290 ஓட்டுச்சாவடிகளில், 2.40 லட்சம் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளும் பதற்றமானவை என்பதால், மத்திய, மாநில போலீசார், 2,500 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று மாலை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்பட்டன. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல், இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. மொத்தம், 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜாவுக்கும், தி.மு.க., வேட்பாளர் மாறனுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 2.4 லட்சம், 40,290 வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, 290 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்காக, 36 மைக்ரோ அப்சர்வர்ஸ், 1,402 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மத்திய தொழில் படை, மத்திய சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் மாநில போலீசார் என, 2,500 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் நிலவரத்தை அறிய, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்காக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள, 261 ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்தப்பட்டு, வாக்காளர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். மின்வசதியில்லாத, 21 இடங்களில், வீடியோ கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். இன்று மாலை, 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், சீல் வைக்கப்பட்டு, சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள, சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்கில் பாதுகாப்புடன் வைக்கப்படுகின்றன.
Comments