ஆகா., இதப்பாருய்யா., காங்கிரசுக்கும் , ராகுலுக்கும் எப்படி தைரியம் வந்தது? அமெரிக்க குழுவினரை மூக்கறுத்தனர்
புதுடில்லி: அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி தேவ்யானி
கைது செய்து அமெரிக்கா அவமதிப்பு செய்த விவகாரம் தற்போது நாடு முழுவதும்
பெரும் அதிர்வலை மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக
தேவ்யானியின் தந்தை உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவை சந்தித்து
மகளுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என கேட்டார். இதற்கு மத்திய அரசு
முழு உதவி செய்யும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
குறிப்பாக அந்த அதிகாரி போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளுடன்
செல்லில் வைக்கப்பட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
வீட்டில் வேலைக்கார பெண்ணாக அமர்த்த விசா பெறுவதில் தவறான ஆவணங்களை தாக்கல்
செய்ததாக அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ராகாடே கடந்த
சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பள்ளியில் தனது குழந்தையை விட்டு வரும்
போது அமெரிக்க பெடரல் போலீசார் இவரை கைது செய்து கையை பின்புறமாக கட்டி
அழைத்து சென்றனர். இந்த சம்பவம் இந்திய அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கைது செய்தது இந்தியாவை பெரும்
வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது, வியன்னா உடன்படிக்கையின்படி வெளிநாட்டு
தூதரக அதிகாரிகள் மீதான குற்றம் வந்தால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட
வேண்டியுள்ளது. இது தேவயானி கைது போது பின்பற்றப்படவில்லை.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று இது
குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது ஏற்று கொள்ள முடியாத
விஷயம். அமெரிக்க நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
நரேந்திரமோடியும் ஒரு இந்திய பெண் அதிகாரி அவமான படுத்தப்பட்டிருப்பது
இந்திய ஒருமைப்பாட்டுக்கு நேர்ந்த இழிவு என கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று அமெரிக்க குழுவினர் இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள்
குறித்து பேச்சு நடத்த இந்தியா வந்துள்ளனர். இவர்களை எந்த வொரு
அமைச்சர்களும் சந்திக்க கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ஷிண்டேயும், அதிகாரிகளும், அமெரிக்க குழுவினரை
புறக்கணிக்க கேட்டுள்ளார். மேலும் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக
அதிகாரிகளுக்கு இந்தியா வழங்கிய அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்ப வழங்க
வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அமெரிக்க
தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்யவும்
உத்தரவிடப்பட்டுள்ளது. காங்., துணை தலைவர் ராகுலும், நரேந்திர மோடியும்
அமெரிக்க குழுவினரை சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் இரு நாட்டு உறவு
விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மதுபானம் இறக்குதி அனுமதி ரத்து: இதை
கண்டித்து, இந்திய தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன. அமெரிக்க தூதுக்குழுவை சந்திக்க முக்கிய தலைவர்கள்
மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய
நுழைவு அனுமதி பாஸ் அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. நாட்டில்
பணிபுரியும் அமெரிக்க அதிகாரிகள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள்,
அவர்களின் வீடுகளில் பணியாற்றும் வேலையாட்கள் குறித்த தகவல்களை உடனடியாக
அளிக்க வேண்டும் என, அமெரிக்க தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,
டில்லி அமெரிக்க தூதரகத்திற்கு இதுவரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்த
பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்திற்கு மதுபானம் இறக்குமதி, விமான நிலைய நுழைவுச்சீட்டு ( பாஸ் ) ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரி வீடுகளில் பணியாற்றும் நபர்கள் யார் ? எத்தனை பேர்? இங்கு இந்தியர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்றீர்கள் ? உள்ளிட்ட சரமாரி கேள்விகளை அரசு கேட்டுள்ளது.
Comments