இதுகுறித்து, இளங்கோவன் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற கருணாநிதியின் அறிவிப்பு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு, காங்கிரசாருக்கு வழங்கிய பரிசாக எடுத்துக் கொள்கிறோம். தமிழக காங்கிரசார் பல ஆண்டுகளுக்கு பின், மகிழ்ச்சியாக உள்ளனர். தி.மு.க., தலைவர், கடந்த காலங்களிலும் காங்., மீது பழிச்சொல் சொல்லி வந்தவர் தான். ஆனால், காரியம் ஆகவேண்டும் எனில், எந்த அளவுக்கும் இறங்கக் கூடியவர். கடந்த ஓராண்டாக காங்கிரசை குறை கூறியவர், ராஜ்யசபா 'சீட்' வாங்கிட, 2 மாதங்களுக்கு முன், டில்லிக்கு சென்று, கட்சித் தலைமையிடம் கெஞ்சினார். இன்று காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை, என்று சொல்லும் கருணாநிதி, காங்., கட்சி வழங்கிய, அவரது மகள் கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய சொல்வாரா?.
இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு, மத்தியில் ஆளும் காங்., கட்சி, அனைத்து உதவிகளையும் செய்துள்ளன. 5 மாநில தேர்தலில், காங்., கட்சி தோல்வி குறித்து, ஜெயந்தி நடராஜன் கூறிய கருத்து, அவரது சொந்த கருத்தாகும். அதுகுறித்து நான் பதில் கூற முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
Comments