தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்: காதர்மொய்தீன் பேட்டி

சென்னை : "'வரும் லோக்சபா தேர்தலிலும், தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்,'' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொய்தீன் மற்றும் அக்கட்சியி"ன் நிர்வாகிகள், சந்தித்து பேசினர்.
வெளியே வந்த காதர்மொய்தீன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க.,வுடன் வைத்திருக்கும் கூட்டணி தொடரும். தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு, நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்."பா.ஜ.,வுடன், லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

Comments