இந்தியர்களுக்கு ஒரு நீதியா?- மத்திய அரசு

புதுடில்லி: அமெரிக்காவில், இந்தியா துணை தூதர் தேவ்யானி கோபர்கேட் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த விவகாரத்தில், தேவ்யானியை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கூறி உள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட அதிகாரி ஒருவர், 'மருந்து ஊழல் புகார் மீது கைது செய்யப்பட்ட ரஷ்யர்கள் 49 பேர், எவ்வித தண்டனையும், போலீஸ் நடவடிக்கையும் இல்லாமல் விடப்பட்டனர்.
ஆனால், இந்தியாவின் ஒரு துணை தூதரை அமெரிக்க போலீஸ் அவமதித்துள்ளது,' என்றார். இது குறித்து அமெரிக்க தரப்பில் பேசிய வழக்கறிஞர், 'ரஷ்யர்கள், ராஜாங்க பிரதிநிதிகள் (டிப்ளமாட்ஸ்) என்பதால் எந்த வழக்கும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்,' என்றார்.ஆனால், அதே பின்னணியில் தேவ்யானியை விடுதலை செய்ய அமெரிக்க மறுத்து வருவதாகவும், இந்த வகையில் இரட்டை வேடம் போடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments