மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நக்சல் கொள்கைகள் :
ஆம் ஆத்மி கட்சிக்கு கொள்கைகள் என்பது இல்லை. அவர்கள் நக்சல் இயக்க
சித்தாந்தங்களை பின்பற்றுகின்றனர். இந்த கொள்கையினால் சமுதாயத்தை
முன்னேற்ற முடியாது. ஆம் ஆத்மி கட்சி சிறிது காலமே இயங்க
முடியும்.நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்காது.
மேலும் கெஜ்ரிவால் ஊழலை
ஒழிக்க போவதாக கூறிவருகிறார். இதுமக்களை ஏமாற்றும் செயல். ஏழை மற்றும்
நடுத்தர மக்களை வசியப்படுத்தி அதன் மூலம் தன்னுடை இமேஜை உயர்த்திக்
கொண்டு்ள்ளார். அவர் ஒரு போதும் ஊழலை ஒழிக்கப் போவதில்லை.
ஆதரவு இல்லை:
தற்போதைய
சூழ்நிலையி்ல் பெரும்பான்மையான மக்கள் கெஜ்ரிவாலின் மீது வைத்திருந்த
நம்பி்க்கை குறைந்து விட்டது. இந்த தேர்தலில் 28 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள
ஆம் ஆத்மிகட்சி அடுத்த தேர்தலின் போது இரண்டு எம்.எல்.ஏக்கள் குறைவாகவே
அக் கட்சி சார்பில் வெற்றி பெறுவர் என சுப்ரமணிய சாமி கூறினார்.
மேலும் காணாமல் போன கட்சிகளுடன் ஒப்பிட்டு பேசிய சுப்ரமணிய சாமி, ஆம் ஆத்மி கட்சிக்கு ஓரு ஒழுங்கான அமைப்பு இல்லை என குறிப்பிட்டார்.
Comments