
கொழும்பு: மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே புற்று
நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர்
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜக்சே, டட்லி ராஜபக்சே,
கோத்தபய ராஜபக்சேவிற்கு மூத்தவர். சமல் ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே
ஆகியோருக்கு இளைய சகோதரராவார்.
பசில் ராஜபக்சேவிற்கு சிகிச்சைப் பெற்று பூரணமாக குணமடையும் தருவாயிலேயே
புற்றுநோய் நிலை காணப்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள ஹஸ்டன் மருத்துவனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ராஜபக்சே சகோதரரான அமெரிக்காவில்
வசித்துவரும் டட்லி ராஜபக்சே கவனித்து வருகிறார்.
Comments