தி.மு.க., பொதுக்குழு
தீர்மானங்கள் குறித்த விளக்க கூட்டம், சென்னை தியாகராயநகரில் நேற்று
நடந்தது. அதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
அ.தி.மு.க.,
பொதுக்குழு திர்மானத்தில், என்னை தீய சக்தி என, முதல்வர் ஜெயலலிதா கடுமையாக
விமர்ச்சித்தார். மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு நான் தீய சக்தியாக
இருப்பேன். தி.மு.க., தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தியுள்ளது. ஆனால், தி.மு.க., அறிமுகம் செய்த திட்டங்களை,
முதல்வர் ஜெயலலிதா முடக்கி வருகிறார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., தலமையிலான
அ.தி.மு.க., அரசு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தது. அதற்கு பின், ஆட்சிக்கு வந்த தி.மு.க., சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கி அதை மேலும் விரிவு படுத்தியது. எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த திட்டம் என்பதற்காக, தி.மு.க., அத்திட்டத்தை முடக்கவில்லை. ஆனால், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க., அரசு முடக்கி வருகிறது. கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா அரசு பல நல்ல திட்டங்களை முடக்குகிறது. இதனால் பாதிக்கப்படுவது முந்தைய ஆட்சியாளர்கள் அல்ல, பொதுமக்கள் தான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பொதுமக்கள், அ.தி.மு.க., அரசின் செல்பாடுகளை மதிப்பிட வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
Comments