ஆம் ஆத்மிக்கு ஆதரவு: கவர்னருக்கு காங்கிரஸ் கடிதம்

புதுடில்லி: டில்லியில் ஆட்சியமைக்க பா.ஜ.,வும் ஆம் ஆத்மியும் மறுத்துள்ளதால் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி டில்லி கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பொது மக்கள் மீது மேலும் சுமையை ஏற்ற விரும்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சியமைக்க 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காங்கிரஸ் கடிதம் குறித்து ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், இந்த விவகாரத்தை கவர்னரின் முடிவுக்கு விட்டுவிடுவதாகவும், அவரின் ஆலோசனைப்படி கட்சி நடக்கும் எனவும் தெரிவித்தன.

Comments