கடந்த ஆண்டு தன் பிறந்த நாளன்று ரசிகர்களை வீட்டில் சந்தித்து
உற்சாகமூட்டினார் ரஜினி. அடுத்த நாள் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.
மைதானத்தில் பெரிய விழா எடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்த விழாவில் ரஜினியும் பங்கேற்றார். அப்போது பெற்றோரை பாதுகாக்க
வேண்டும், சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும் என்றெல்லாம் ரசிகர்களுக்கு
அறிவுரைகள் கூறினார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கை
விட்டனர்.
ஆனால் இந்த பிறந்த நாளில் அவர் சென்னையில் இல்லை. நேற்று முன்தினம் மாலை
திடீர் என்று பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
இன்று நண்பர்களுடன் யாரும் அறியாத ஒரு இடத்தில் ரஜினி தனது பிறந்த நாளை
எளிமையாக கொண்டாடுகிறார்.
ரஜினி இல்லை என்பது தெரிந்தும், ஏராளமான ரசிகர்கள், பெண்கள் ஆர்வத்துடன்
ரஜினி வீட்டுக்குச் சென்று, வீட்டிலிருந்தவர்களிடம் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுக்கு ரஜினி வீட்டார் இனிப்பு கொடுத்து அனுப்பினர்.
Comments