அன்னாவுக்கும் எனக்கும் இடையே பிரிவை ஏற்படுத்த முயற்சி: கெஜ்ரிவால்

புதுடில்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கும், தனக்கும் இடையே பிரிவை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பிரிவை ஏற்படுத்த சில சக்திகள் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. அன்னா தனது இதயத்தில் இருப்பதாகவும் கூறினார். பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் எவை என்பதை தெரிவிக்க கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

Comments