சென்னை: தமிழக பா.ஜ., தலைவர்களில் ஒருவரான இல கணேசன், சென்னை விமான
நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்., தி.மு.க., இடையே உள்ள
பூசல் காரணமாகவே, காங்.,குடன் உறவு முறிந்துவிட்டது என தி.மு.க,. தலைவர்
கருணாநிதி கூறி உள்ளார்.
இது, காங்கிரஸ் கட்சிக்கு அவர் மறைமுகமாக
விட்டுள்ள அச்சுறுத்தல் என்றே நான் கருதுகிறேன். எனவே, எந்த நேரத்திலும்,
காங்., குறித்த விஷயத்தில் தி.மு.க., தனது நிலைப்பாட்டை மாற்றிக்
கொள்ளும். இதுபோன்ற சூழ்நிலையில், கருணாநிதியின் அறிவிப்பு குறித்து நான்
கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு இல கணேசன் கூறினார்.
Comments