தமிழகத்திலும் 'ஆம் ஆத்மி' போட்டி : நெல்லையில் பிரசாந்த் பூஷன் பேட்டி

திருநெல்வேலி: பார்லிமென்ட் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, தமிழகத்தில் போட்டியிடும்,'' என, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு தலைவர் பிரசாந்த் பூஷனுக்கு, கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது. அந்த விழாவுக்கு வந்த பிரசாந்த் பூஷன், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் இடிந்தகரைக்கு வந்து, போராட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.


பின்னர் அவர் கூறியதாவது: காங்., ஆதரவுடன் டில்லியில் ஆட்சி அமைத்துள்ளோம். அவர்கள் எங்களது ஆட்சிக்கு எதிராக முடிவு எடுப்பதற்கு முன், மக்களுக்கு நல்லது செய்வோம். மக்களுக்கு அடிப்படையான முற்போக்கு அரசியல் மாற்றங்களை கொண்டு வருவோம். வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் உட்ப ட அனைத்து மாநிலங்களிலும், அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம், என்றார்.

Comments