இந்தியா-பாக்., போர் வரும்- நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: காஷ்மீரை மையமாக வைத்து, இந்தியா-பாக்., இடையே எந்த நேரத்திலும் போர் நடக்கலாம் என, பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறி உள்ளார். மேலும், 'என் வாழ்நாளுக்குள் காஷ்மீரை தனி நாடாக பார்க்க வேண்டியது எனது கனவு' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் பிரச்னையில், அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தீர்வு காண வேண்டும் என்று கூறி உள்ள நவாஸ், இந்தியா ஆயுத போட்டியை ஏற்படுத்தி உள்ளதால், பாகிஸ்தானும் அந்த ஓட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி உள்ளது என்றார்.

Comments