இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவில் இதுவரை இருந்த சாதனை, ஏற்காட்டில் நேற்று முறியடிக்கப்பட்டது

இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவில் இதுவரை இருந்த சாதனை, ஏற்காட்டில் நேற்று முறியடிக்கப்பட்டது மொத்த வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் ஓட்டு போட்டு புது வரலாற்றைப் படைத்தனர். தி.மு.க., ஆட்சியில் நடந்த திருமங்கலம் தேர்தல் சாதனையை ஏற்காடு மிஞ்சியது.

ஏற்காடு தொகுதியில், நேற்று, காலை ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மாலை வரை, விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. அனைத்து ஓட்டுச்சாவடியிலும், மக்கள் ஆர்வமுடன் சாரைசாரையாக வந்து ஓட்டளித்தனர். வாக்காளர்களை அரசியல் கட்சியினர்
பலமாக கவனித்திருந்ததால், 90 சதவீதம் ஓட்டு பதிவானது. மத்திய, மாநில போலீசார் பாதுகாப்பில் இருந்ததால், எவ்வித அசம்பாவிதமுமின்றி, அமைதியான முறையில், ஓட்டுப்பதிவு முடிந்தது.ஏற்காடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பெருமாள் மறைந்ததையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளராக சரோஜாவும், தி.மு.க., வேட்பாளராக மாறனும் போட்டியிட்டனர். மொத்தம், 11 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர். கடந்த, 2ம் தேதி மாலை, 5:00 மணியுடன், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.


ஓட்டுப்பதிவுக்காக, 2.40 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க, 290 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 1,450 ஊழியர்கள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். மத்திய, மாநில போலீசார், 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று, ஓட்டுப்பதிவு நாள். காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, வாக்காளர்கள், வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.தி.மு.க., வேட்பாளர் மாறன், பூவனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா, பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியிலும் ஓட்டு போட்டனர். ஒவ்வொரு சாவடியிலும், வாக்காளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. "பணம் வாங்காமல் ஓட்டளியுங்கள்; மனசாட்சிப்படி ஓட்டு போடுங்கள்' என்ற வாசகம் அடங்கிய நோட்டீஸ்கள், ஓட்டுச்சாவடி முன் ஒட்டப்பட்டிருந்தன.பேளூரை அடுத்த குறிச்சி ஓட்டுச்சாவடியில், "வெப் கேமரா' பழுதடைந்ததால், சிறிது நேரம் தாமதமானது. ஏற்காட்டில், மரம் விழுந்து மின்தடை ஏற்பட்டதால், ஒரு சில சாவடிகளில், பேட்டரி மூலம் மின்வசதி ஏற்படுத்தப்பட்டது. காலை, 10:00 மணி நிலவரப்படி, 18 சதவீத ஓட்டும், மதியம், 12:00 மணி நிலவரப்படி, 43 சதவீத ஓட்டும், மாலை, 2:00 மணி நிலவரப்படி, 65 சதவீதம், மாலை 4:00 மணி நிலவரப்படி, 86 சதவீதம், இறுதி நிலவரப்படி, 90 சதவீதம் ஓட்டு பதிவானது. கடந்த, 2011ல் நடந்த தேர்தலில், 74 சதவீதம் ஓட்டுப்பதிவானது குறிப்பிடத்தக்கது.
மாலை, 6:00 மணிக்கு மேல், ஓட்டுப்பெட்டிகள் "சீல்' வைக்கப்பட்டு, சேலம், அஸ்தம்பட்டி, சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்கிற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.அதிகப்படியாக ஓட்டு பதிவாகி உள்ளதால், அ.தி.மு.க., வெற்றி பெறுமா, தி.மு.க.,வுக்கு டெபாசிட் கிடைக்குமா என, அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும், 8ம் தேதி காலை, 11:00 மணிக்குள், வெற்றி யாருக்கு என்பது தெரிந்துவிடும்.

திருமங்கலத்தை மிஞ்சியது:கடந்த, தி.மு.க., ஆட்சியில், திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க.,வினர், அழகிரி மேற்பார்வையில் தேர்தலை சந்தித்தனர். பணப்பட்டுவாடா உள்ளிட்ட கவனிப்பால், அந்த தேர்தல் வெற்றிக்கு பின், "திருமங்கலம்' பார்முலா என, தி.மு.க.,வினர் கூறி வந்தனர். அந்த தேர்தலில், 88 சதவீதம் ஓட்டு பதிவானது. அதே பாணியில் பென்னாகரம் இடைத்தேர்தலிலும் பணியாற்றிய, தி.மு.க.,வினர், அ.தி.மு.க., வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்தனர்.திருமங்கலம் பார்முலாவை முறியடிக்க வேண்டும் என்ற வகையில் பணியாற்றிய, அ.தி.மு.க.,வினர், ஓட்டுக்கு, 2,000 ரூபாய், பரிசுப் பொருட்கள் என, வாரி இறைத்தனர். போட்டிக்கு தி.மு.க.,வினரும் ஓட்டுக்கு, 500 ரூபாய், என வாரி வழங்கினர். இரு கட்சியினரும் நினைத்தது போல், ஓட்டுப்பதிவு சதவீதம் எகிறியது. கடைசி கட்ட நிலவரப்படி ஏற்காடு தொகுதியில், 90 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. இது, அ.தி.மு.க.,வினரை குஷியடையச் செய்துள்ளது.  
ஓட்டுப்பதிவு நடந்தது. அனைத்து ஓட்டுச்சாவடியிலும், மக்கள் ஆர்வமுடன் சாரைசாரையாக வந்து ஓட்டளித்தனர். வாக்காளர்களை அரசியல் கட்சியினர் பலமாக கவனித்திருந்ததால், 90 சதவீதம் ஓட்டு பதிவானது. மத்திய, மாநில போலீசார் பாதுகாப்பில் இருந்ததால், எவ்வித அசம்பாவிதமுமின்றி, அமைதியான முறையில், ஓட்டுப்பதிவு முடிந்தது.ஏற்காடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பெருமாள் மறைந்ததையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளராக சரோஜாவும், தி.மு.க., வேட்பாளராக மாறனும் போட்டியிட்டனர். மொத்தம், 11 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர். கடந்த, 2ம் தேதி மாலை, 5:00 மணியுடன், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

2011 தேர்தல் ஓட்டு பதிவு விவரம்:கடந்த, 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், ஏற்காடு தொகுதியில் மொத்தம், ஆறு பேர் போட்டியிட்டனர். தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வனை விட, அ.தி.மு.க., வேட்பாளர் பெருமாள், 37,582 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றார்.

மொத்த ஓட்டுகள்:2,09,981
பதிவான ஓட்டுகள்: 1,79,452
பெருமாள் (அ.தி.மு.க.,) : 1,04,221
தமிழ்செல்வன் (தி.மு.க.,): 66,639
செல்வம் (சுயேச்சை) : 2,437
ராஜா செல்வம் (பா.ஜ.,) : 2,226
மகேஸ்வரன் (ஐ.ஜே.கே.,) : 2,185
சிவகுமார் (சுயேச்சை) : 1,744
74 சதவீதம் ஓட்டு பதிவானது.

தேர்தல் கமிஷனுக்கு வெற்றி:""ஏற்காடு இடைத்தேர்தல், அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை, மக்களிடையே தூண்டியுள்ளது. இது தேர்தல் கமிஷனுக்கு கிடைத்த வெற்றி,'' என, சேலம், கலெக்டர் மகரபூஷணம் கூறினார்.ஏற்காடு இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பின், சேலம் கலெக்டர் மகரபூஷணம் நிருபர்களிடம் கூறியதாவது:ஓட்டுப்பதிவு, எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தை, ஏற்காடு தேர்தல், வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளது. இறுதி நிலவரப்படி, மொத்தம், 89.75 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. வரும், 8ம் தேதி, சேலம், அஸ்தம்பட்டி, சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்கில், ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments