முக்கிய மசோதாக்கள்:
முக்கிய
மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு இந்த கூட்டத்தொடரை பயன்படுத்தி கொள்ள
நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அடு்த்தாண்டு நடைபெறும் கூட்டத்தொடர்
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு மட்டுமே பயன்படுவதால் இந்த
கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே
பார்லிமென்டை அமைதியாக கொண்டு செல்லும் விதமாக பார்லி., விவகாரத்தறை
அமைச்சர் கமல்நாத் சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் அனைத்து கட்சி கூட்டத்தை
கூட்டியுள்ளனர்இருப்பினும் மத மோதல் தடுப்பு மசோதா, வங்காள தேசத்துடன் எல்லை ஒப்பந்தம் ஆகியசட்ட திருத்தத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே போல் பெண்கள் இட ஒதுக்கீடு குறித் மசோதாவிற்கு சமாஜ்வாடி கட்சியும் , உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து இ.கம்யூ.,வும் பிரச்னைகளை கிளப்ப தயாராக உள்ளன.
எதிர்கட்சிகள் தயார் :
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 35க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.மேலும் கூட்டத்தொடர் வெறும் 12 நாட்கள் மட்டுமே நடைபெறுவதால் மசோதாக்களை நிறைவேற்றும் வித்ததில் கூட்டத்தொடருக்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தொடரின் முதல் நாளில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் ஒத்திவைக்கப்படும் பின்னர் மறுநாள் பாபர் மசூதி இடிப்பு தினமாக அமைவதால் பார்லியில் கூச்சல் குழப்பம் அதிகரித்து காணப்படும். முறையான அலுவலகள் வரும் திங்கட்கிழமை முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments