ஜெ., கடிதம் எழுதுவதோடு சரி-நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இலங்கை கடற்படையினர் மற்றும் அந்நாட்டு மீனவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கான தேதியை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்.
பல நாட்கள் ஆகியும் இதுவரை தேதி முடிவு செய்யப்படவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவதோடு மட்டும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்கிறார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Comments