இந்நிலையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்த நூயி நேற்று
தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
காவலாளியைக் காணவில்லை. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ மற்றும்
கப்போர்டுகள் திறந்து கிடந்தன. அவற்றில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள்
திருடு போயிருந்தன.
இதையடுத்து நூயியின் மேனேஜர் ஸ்ரீலேகா இது குறித்து பாண்டி பஜார் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தார். திருடுபோன பொருட்களின் மதிப்பை நூயியின்
அம்மா தான் கூற வேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்திருந்தார். அவரது
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி
வருகின்றனர்.
Comments