சிவாஜி
கணேசன் சமூக நலப் பேரவை சார்பில், சென்னையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம்
முன், நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவை தலைவர், சந்திரசேகரன்,
தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளிலும், முக்கிய
சாலைகளிலும், பல தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,
'சிவாஜி சிலையை அகற்ற வேண்டும்' என, வழக்கு தொடர்ந்திருப்பது
வருத்தமளிக்கிறது. சிலையை அகற்ற, அரசு இயந்திரம் செயல்படுவது போல உள்ளது.
சாலைகளில் இடைஞ்சலாக உள்ள, மற்ற சிலைகள் குறித்து ஆய்வு செய்து,
அகற்றுங்கள். அதன் பிறகு சிவாஜி சிலையை அகற்றுவது குறித்து முடிவெடுங்கள்.
அதுவரை சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என, ரசிகர்கள் கோஷமிட்டனர்.
பேரவையின், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மற்றும் திருவள்ளூர்
மாவட்டத் தலைவர்கள், உறுப்பினர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
Comments