மலையாள நட்சத்திரங்களில் இப்போது பேஸ்புக்கில் அதிக லைக்கர்களோடு முன்னணியில் இருப்பது நஸ்ரியா நாசிம். சமீபத்தில் நய்யாண்டி பட தொப்புள் விவகாரத்தில் நஸ்ரியாவின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிவிட நஸ்ரியா முதலிடத்திற்கு சென்று விட்டார். இன்றைய நிலவரப்படி நஸ்ரியா 23 லட்சத்து 31 ஆயிரத்து 418 லைக்கர்களுடன் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பாவனா இருக்கிறார். அவருக்கு 15 லட்சத்து 25 ஆயிரம் லைக்கர்கள் இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முதல் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் மோகன்லால் 14 ஆயிரத்து 63 ஆயிரம் லைக்கர்களுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். மம்முட்டிக்கு 13 லட்சத்து 13 ஆயிரத்து லைக்கர்களும், அவரது மகன் துல்கர் சல்மானுக்கு 11 லட்சம் லைக்கர்களும், மஞ்சுவாரியாருக்கு 10 லட்சம் லைக்கர்களும் இருக்கிறார்கள்.
Comments