தெலுங்கானா மாநிலம் உதயம்?:
ஆந்திரமாநிலத்தை
இரண்டாக பிரித்து புதிய தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என
டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகரராவ் போராடி வந்தார். இதன் காரணமாக
ஆந்திர மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து மத்திய அரசு
மாநிலத்தை
இரண்டாக பிரித்து இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானாவை
புதிய மாநிலமாக அறிவிக்க உள்ளது. இன்று நடைபெற உள்ள குளிர்கால
கூட்டத்தொடரில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
சந்திரசேகரராவ் எதிர்ப்பு:
இந்நிலையில்
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளார் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர்
சந்திரசேகரராவ்.இது குறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:
தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் மத்திய அரசு தங்களை ஏமாற்றி விட்டது. புதிதாக உருவாக்கப்படும் மாநிலத்தில் குறைந்த பட்சம் 10 மாவட்டங்கள் இடம் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் 21 லோக்சபா தொகுதிகளையும் 147 எம்.எல்.ஏ., தொகுதிகளையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இவை எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதி ஆகிய இரண்டு பகுதிகளையும் சேர்த்தால் 153 எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் குறைந்த பட்சம் 119 எம்.எல்.ஏக்கள் தெலுங்கானா பகுதிகளி்ல் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆனால் மத்திய அரசு இவை எதையும் கவனத்தி்ல் கொள்ளாமல் வரும் மே மாதம் நடைபெற உள்ள லோகசபா தேர்தலை மட்டுமே கவனத்தில் கொண்டு மாநிலத்ததை பிரித்துள்ளது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் வியாழக்கிழமை தெலுங்கானா பகுதிகளில் மீண்டு்ம் போரட்டம் நடத்தப்படும் என கூறினார்.
Comments