'ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் நிறைவான தீர்ப்பு: உரிய நேரத்தில் வரும் என்கிறார் கருணாநிதி

சென்னை: 'முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முழுமையான, நிறைவான தீர்ப்பு, உரிய நேரத்தில் வரும்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்,

அவரது அறிக்கை:

"முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், தொடர்புடைய சென்னையில் உள்ள அசையும் சொத்துக்களை, வழக்கு விசாரணை நடந்து வரும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு, இம்மாதம், 21ம் தேதிக்குள் கொண்டு வர வேண்டும்' என, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதுவே இந்த வழக்கில், முழுமையான தீர்ப்பல்ல. "ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா தான், இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பினர் கோரிக்கை வைத்து, அது நிறைவேறாமல் போனபோதே, சட்டம் தன் கடமையைச் சிறப்பாகச் செய்கிறது, என்று தான் கருதப்பட்டது. அதே வரிசையில், முழுமையான, நிறைவான தீர்ப்பு உரிய நேரத்தில் வரும் என்றே தமிழகம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Comments