பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு
நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், ஜெ.,விடம் பறிமுதல் செய்யப்பட்ட
பொருட்களை பெங்களூருக்கு கொண்டு வர வேண்டும் என, மனுதார் தரப்பில்
கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய கோர்ட், இன்று
தீர்ப்பளித்தது. இதில், சென்னை ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள,
ஜெ.,யிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, பெங்களூரு,
விதான்சவுதாவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், வரும் 21ம்
தேதிக்குள் பாதுகாப்பாக கொண்டு வந்து வைக்கப்பட வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments