சென்னை: லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து நின்று வெற்றி
பெறுவதே இலக்கு' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில், அதிரடி தீர்மானம்
நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆளும் கூட்டணியில் இடம் கிடைக்கும்
என்ற எதிர்பார்ப்பில், காத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, "கல்தா'
கொடுக்கப்பட்டு உள்ளது. "லோக்சபா தேர்தலில், தனித்துப் போட்டி' என
அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40
தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினரிடம், விருப்ப மனு
வாங்கும் நிகழ்ச்சியும் நேற்று துவங்கியுள்ளது.
கடந்த, 15ம் தேதி, பொதுக்குழுவை கூட்டிய தி.மு.க., தன் தேர்தல் வியூகத்தை அறிவித்தது. காங்., பா.ஜ., அல்லாத கூட்டணியை ஏற்படுத்தப் போவதாக, அக்கட்சி கூறியது. அதையடுத்து, தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க.,வின் கூட்டணி திட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த சில நாட்களாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, நேற்றைய பொதுக்குழுவில், "தனித்துப் போட்டி' என்ற, அதிரடி தீர்மானத்தை, அ.தி.மு.க., நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம், அக்கட்சியின் லோக்சபா தேர்தல் வியூகமும், பிரதமர் நாற்காலியை நோக்கி நகரும் திட்டமும் வெளிப்பட்டுள்ளது.
கூட்டணி திட்டம் என்ன?:
இலக்கு:
கடும் அதிருப்தி:
முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* என்.எல்.சி., பங்குகளை, தனியாருக்கு விற்பதை, தமிழக அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. மத்திய ஆட்சி பொறுப்பில், பல ஆண்டுகள் பங்கேற்றபோதும், எந்தவொரு நற்செயலையும், உலகத் தமிழர்களுக்காக செய்யாமல், தி.மு.க., துரோகம் இழைத்துள்ளது. எனவே, லோக்சபா தேர்தலில், தமிழக வாக்காளர்கள், தி.மு.க.,வை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.
* "இலங்கையில் நடந்த, காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா புறக்கணிக்க வேண்டும்' என, தமிழர்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆனால், அந்த உணர்வுகளை அலட்சியப்படுத்தி, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
* இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, இந்தியாவில் தொடர்ந்து, பயிற்சி கொடுக்க அனுமதிக்கப்படுவதும், தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்.
* தமிழகத்தின் தேவைகளை முன்னிறுத்தி, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்திய அரசை வலியுறுத்தியும், இதுவரை செவி சாய்க்கவில்லை.
* தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, சிறப்பு நிதி வேண்டும்; கூடுதல் மண்ணெண்ணெய்; மத்திய மின் தொகுப்பிலிருந்து, கூடுதல் மின்சாரம்; கல்வித் துறைக்கு, சிறப்பு நிதி; கூடங்குளம் மின்சாரம்; வறட்சியை சமாளிக்க, கூடுதல் நிதி; அரசு கேபிள் "டிவி' நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம்; காவிரி நதி நீர் முறைப்படுத்தும், மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.
* அ.தி.மு.க., தொண்டர்கள், அர்ப்பணிப்போடு, லோக்சபா தேர்தலில் பணியாற்றி, கட்சிக்கு பெரும் வெற்றி தேடித் தருவதோடு, முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவை வழி நடத்த, தேர்வு செய்யும் சூழலை உருவாக்க, சபதம் எடுக்க வேண்டும்.
* லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும், அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல், லோக்சபா
தேர்தலுக்கு பிறகு நடத்த, பொதுக்குழுவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேறின.
இந்தியாவை வழி நடத்துபவராக ஜெ.,வை தேர்வு செய்ய சபதம்: அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், நேற்று, மாலை, 3:00 மணிக்கு துவங்கியது. முதலில், செயற்குழு கூட்டம் நடந்தது. பின்னர் கூடிய பொதுக்குழுவில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். மகளிரணி செயலரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான சசிகலா புஷ்பா நன்றி கூறினார். மொத்தம், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருணாநிதி உற்சாகம்:
Comments