தமிழக பாஜக கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது!

தமிழக பாஜக கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது!சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பும் இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பாரதிய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் அக் கூட்டணியில் அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சேர்ந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments