
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், காங்., பிரதமர் வேட்பாளராக, லோக்சபா
சபாநாயகர், மீரா குமார் அல்லது உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே
அறிவிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, லோக்சபா
தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி
அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரசின், பிரதமர் வேட்பாளர் யார் என, இன்னும்
அறிவிக்கப்படவில்லை.
நடந்து முடிந்துள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்
முடிவுகளில், காங்கிரஸ் சந்தித்த பெரிய தோல்வி, அந்த கட்சியை, பெரும்
நெருக்கடியில் தள்ளியுள்ளது. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டு
மென, கட்சியில் ஒரு பிரிவினர், குரல் எழுப்பி வருகின்றனர். ஜனவரி மாதம்,
டில்லியில் நடைபெறும், காங்கிரஸ் மாநாட்டில், ராகுலின் பெயரை அறிவிக்க,
அந்தக் கட்சி, தயாராகி வருவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர்
வேட்பாளராக, ராகுலை அறிவிக்காவிட்டால், மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை,
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்றும் பேச்சு அடிபட்டது. அதற்கு,
கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள், பலத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, தலித் மக்களின் ஓட்டுகளை குறிவைத்து, தலித் சமுதாயத்தை
சேர்ந்த, இரண்டு முக்கிய நபர்களான, லோக்சபா சபாநாயகர், மீரா குமார் மற்றும்
உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம்
என, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் யோசனை தெரிவித்து உள்ளனர்.
Comments