கெஜ்ரிவாலின் மின்கட்டண சலுகையில் சிக்கல்

புதுடில்லி: மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று, டில்லி மின்சார ஒழுங்குமுறை குழு கூறி உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், மின்கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இழுபறிக்கு பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள ஆம் ஆத்மிக்கு, முதல் கட்ட சோதனை துவங்கி உள்ளது. மின்கட்டணத்தை குறைக்கும் விஷயத்தில் மாநில அரசு தலையிட முடியாது என்றும், குறைக்க வேண்டும் என்றால், அதற்கான மானியத்தை அரசு தர வேண்டும் என்றும் டில்லி மின்சார ஒழுங்குமுறை குழு கூறி உள்ளது. இதனால், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட மின் கட்டண குறைப்பு, ஆம் ஆத்மிக்கு பெரும் சவாலாக உள்ளது.

Comments