“முட்டாள்
தனமான செயல்களை விட பயங்கரமானது எதுவுமில்லை”
என்று ஜவஹர்லால் நேரு கூறினார் - ‘தி இந்து’ 14.11.2013
இதுநாள்
வரை மாநில முதல்வராக இருந்து
கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு தரகராக இருந்து செயல்பட்ட
நரேந்திர மோடி, அடுத்தக்கட்ட முன்னேற்றமாக
இந்தியாவின் பிரதமராக இருந்து அடிமை சேவகம்
செய்ய வேண்டும் என்ற கனவோடு பிரதமர்
பதவிக்ககாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றார்.
ஒவ்வொரு
பொதுக்கூட்ட மேடைகளிலும் வரலாறுகளை பேசுகின்றோம் என்ற பெயரில், ஒரு
முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட்டு
வருகின்றார். வரலாற்றை பேசுவதன் மூலம் மக்களின் செல்வாக்கை
பெற்றுவிடலாம் என்ற நோக்கில், தவறான
ஒரு வரலாறை பதிவு செய்து
வருகிறார்.
சங்பரிவார்களின்
வரலாறு என்பது, சதி வரலாறு
மட்டும் தான் என்பதை இந்த
நாடும், நாட்டு மக்களும் நன்கு
அறிவார்கள். அதனால், அவர்களின் வரலாறை
பேசினால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது என்பதை
அறிந்த இவர்கள், ஏற்கெனவே உள்ள பழைய வரலாறை,
வேறொரு வடிவில் சொல்லி வருகிறார்கள்.
பா.ஜ.க.வின்
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மோடிக்கு பொதுக்கூட்ட மேடையில் கூட
பேசத் தெரியாது என்பது சமீபத்தில் நடந்த
நிகழ்வுகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இன்றைய அரசியல்வாதிகளிடம் உள்ள
ஒரு பிரதான குணம் பொதுக்கூட்ட
மேடையில் வீரவசனங்கள் பேசி தங்களுடைய இமேஜை
நிலைநிறுத்திக் கொண்டு, தாங்களும் ஒரு
அரசியல்வாதி என்ற பட்டத்தை தாங்களாகவே
போட்டுக் கொள்ளும் கைதேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அந்த சராசரி தகுதிக்கூட மோடிக்கு
கிடையாது என்பதை, அவர் பேசி
வரும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக்
கூட்டங்களும் நிரூபிக்கின்றன. காங்கிரஸை விமர்ச்சிக்கிறோம் என்ற பெயரிலும், எனக்கும்
வரலாறு தெரியும் என்கிற பெயரில் அரசியல்
நாகரிகமற்ற பேச்சுக்களை பேசி வருகிறார்.
நானும்
பிரதமர் வேட்பாளர்களுக்கு தகுதியான ஆள்தான் என்பதை நிரூபிக்க
வேண்டும் என்பதற்காக நேருவையும், படேலையும் இணைத்து கருத்து சொல்வது,
அதன் மூலம் ஒரு சர்ச்சையை
ஏற்படுத்துவதென்பதை தொடர்ந்து செய்து வருகின்றார். படேல்
நினைவு சங்கம் சார்பில் குஜராத்
மாநிலம் ஆமதாபாத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா 29.10.2013 அன்று
நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன்
சிங்கும், “மோடியும் கலந்து கொண்டனர். அப்போது
மோடி உரையில் குறிப்பிடும் போது,
ஒருவேளை பட்டேல் பிரதமராகி இருந்தால்
நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும்” என்றார்.
இந்தக்
கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் மூலம் நானும் படேலின்
கொள்கையில் வந்தவர் தான் வெளிப்படுத்துவதற்காக
இப்படி ஒரு கருத்தை பதிவு
செய்தார். இதன் மூலம் காங்கிரஸ்
கட்சியையும், நேருவையும் சாட வேண்டுமென்பதே அவருடைய
பிரதான நோக்கமாகும். இதற்கு பாரதிய ஜனதா
தரப்பில் இருந்து எந்தப் பதிலும்
வரவே இல்லை.
அடுத்ததாக,
படேலின் இறுதிச் சடங்கில் நேரு
கலந்துகொள்ளவில்லை என்று கொஞ்சமும் வாய்கூசாமல்
பேசியது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், நேரு படேலின்
இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, மரியாதை
செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில்
உள்ள கேதாவில் நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் மோடி
பேசும்போது,லண்டனில் இந்தியா ஹவுஸ் தொடங்கியதாக
சியாம கிருஷ்ணா வர்மாவுக்கு பதிலாக சியாமா பிரஷாத்
முகர்ஜியை புகழ்ந்தார் மோடி. இது புதிய
சர்ச்சையை ஏற்படுத்தியது. சுதந்திரப்
போராட்ட காலத்தில் தேசிய சிந்தனையை வளர்க்கும்
வகையில் பிரிட்டன் தலைநகரான லண்டனிலேயே இந்தியா ஹவுஸ் அமைப்பை
ஏற்படுத்தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி
என்றார்.
அவர் இந்திய புரட்சியாளர்களின் குரு
என்று கருதப்படுகிறார். 1930ம் ஆண்டு உயிரிழந்த
சியாமா பிரசாத் முகர்ஜி, தனது
அஸ்தியை பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதும்
எடுத்துச் செல்ல வேண்டும் என்று
கூறியிருந்தார். குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன்
சியாமா பிரசாத்” என்றார்.
மோடி இவ்வாறு தெரிவித்தது உண்மைக்கு
மாறான தகவல்கள் ஆகும். சியாமா பிராசாத்
முகர்ஜி பிறந்தது கொல்கத்தாவில், குஜராத்தில் அல்ல. அவர் உயிழிந்தது
1953ம் ஆண்டு (இந்தியா சுதந்திரமடைந்த
பிறகு). 1930ம் ஆண்டில் அல்ல.
அவர் உயிழிந்த பின் மேற்கு வங்கத்தில்
தகனம் செய்யப்பட்டது அவரது உடல்.
உண்மையில்
மோடி கூறிய பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்
சியாமஜி கிருஷ்ண வர்மாதான். சமஸ்கிருத
பண்டிதரான அவர், குஜராத்தின் மாண்ட்வி
நகரில் 1857ம் ஆண்டு அக்டோபர்
4ம் தேதி பிறந்தார். அவர்தான்
லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை
தொடங்கினார்.
ஜவஹர்லால்
நேரு அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராக பதவி வகித்த சியாமா
பிரசாத் முகர்ஜி, காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜன
சங்கத்தை (பா.ஜ.க.வின் தாய்க்கட்சி) 1951ம்
ஆண்டு தோற்றுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,
இவர் தான் லண்டனில் இந்தியா
ஹவுஸ் அமைப்பை தொடங்கினார் என்று
வரலாற்றை மாற்றி பேசினார்.
இதுவரை
கார்ப்பரேட் நிறுவங்களுக்கு குஜராத்துக்கு மட்டும் தரகர் வேலைபார்த்த
நரேந்திர மோடி , தற்பொழுது ஒட்டுமொத்த
இந்தியாவுக்கும் தரகர் வேலை பார்க்க
ஆசைப்படுகிறார். இதற்கு அவர் எடுத்திருக்கும்
ஆயுதம் தான் வரலாறுகளை பேசுவது.
ஒவ்வொரு மேடைகளிலும் எழுதி வைத்துக் கொடுப்பதை
மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பழக்கம்
தான் இவரிடம் உள்ளது. இவருக்கு
என்றும், சங்பரிவார்களுக்கு என்றும் ஒருசொந்த வரலாறு
கிடையாது என்பதை மக்கள் உணர
வேண்டும். இதுபோன்ற முட்டாள்தனமான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை விட, மௌனமாக இருந்து
விடலாம்.
நெல்லை
சலீம்
Cell - 96772 01727
Email - erusaleem@gmail.com
Comments