விழாவை துவங்கி வைத்து, நடிகர் கமலஹாசன் பேசியதாவது: தமிழ் சினிமா உலக சினிமாவேடு ஒட்டிப்போகும் வகையில், உயர்த்துவதற்கு, சிலர் முயற்சித்தால் மட்டும் முடியாது.
சென்சார் போர்டில் அரசியல் கூடாது. சினிமா பற்றி தெரியாதவர்களை, அரசியல் தொடர்பானவர்களை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதால், சினிமாவிற்கு சிக்கல்களும் வந்துவிடுகிறது. சினிமா நன்கு தெரிந்தவர்கள் சென்சார்போர்டுக்கு வரவேண்டும்.இத்திரைப்பட விழா, சென்னை சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான படங்களை பார்க்க நல்ல வாய்ப்பு. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்தி நடிகர் அமீர்கான் பேசும்போது, ""இந்திய சினிமா முன்னேறி வருகிறது. உலகத்தரத்திற்கு நிச்சயம் உயரும். கோவா சர்வதேச திரைப்பட விழா, மும்பை சர்வதேச திரைப்பட விழாக்களில்,உலக நாடுகளில் தயாரிக்கப்பட்ட பிரபலமான, வித்தியாசமான கதை மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும், இப்படி நிறைய படங்கள் திரையிடப்படுகின்றன. உலக கலாச்சாரத்தை, சினிமா தொழில் நுட்பத்தை இங்குள்ளவர்கள் எளிதாக தெரிந்து கொள்ள, இவ்விழா மிகவும் உதவியாக இருக்கும்'', என்றார்.
விழாவில், நடிகை சோபனா, சொர்ணமால்யா ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், "யு டிவி' தனஞ்செயன், திரைப்பட விழாவை நடத்தும் சென்னை திரைப்படத் திறனாய்வு கழகத்தின் தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் தங்கராஜ், சுகாசினி, லட்சுமி, ரோகிணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல் படமாக, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட, "லைக் பாதர் லைக் சன்'படம் திரையிடப்பட்டது.
வரும், 19ம் தேதி வரை, அபிராமி, ஐநாக்ஸ், உட்லண்ட்ஸ், ராணி சீதை அரங்கிலும் விழாப் படங்கள் திரையிடப்படுகின்றன.
Comments