ஆய்வில் கண்டுபிடிப்பு:
துவக்கப்
பள்ளிகளுக்கு எளிதில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆனால்,
அந்த கம்ப்யூட்டர்களை இயக்க, அந்தப் பள்ளிகளுக்கு, மின்சாரம் கிடைப்பது,
குதிரைக்கொம்பாக உள்ளதாக, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக தேசிய
பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஐக்கிய ஜனதா தளம் கட்சியை
சேர்ந்த, முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான, பீகார் மாநிலத்தில்,
மொத்தமுள்ள துவக்கப் பள்ளிகளில், 4.80 சதவீதம் பள்ளிகளில் தான்
கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட
பள்ளிகளில், 28.13 சதவீத பள்ளிகளில், மின்சார வசதி கிடையாது என்பது, அந்த
நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முடங்கி கிடக்கின்றன:
ஜார்க்கண்ட்
முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த, முதல்வர், ஹேமந்த் சோரன் தலைமையிலான,
ஜார்க்கண்ட் மாநிலம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், தருண் கோகாய்
தலைமையிலான அசாம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த,
முதல்வர், மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில், 80 சதவீத
பள்ளிகளுக்கு மின் இணைப்பு கிடையாது.ஆனால், அந்தப் பள்ளிகளில், 74 சதவீத
பள்ளிகளுக்கு, கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.காங்கிரஸ் கட்சியை
சேர்ந்த, முதல்வர், சித்தராமைய்யா தலைமையிலான, கர்நாடக மாநில அரசில், 81
சதவீத துவக்கப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், 96
சதவீத கம்ப்யூட்டர்கள், பள்ளிகளில் மின் இணைப்பு இல்லாததால், முடங்கிக்
கிடக்கின்றன.
Comments