பதவி ஏற்பு:
டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பதும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்பதும் உறுதியாகிவிட்டது.
ஊழல் ஒழிப்பு:
ஒரு
மனிதன் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என முழுமனதாக நினைத்தால் அது சுலபமாக
முடியும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைத்து, பரிவர்த்தன் என்ற இணைய
தளத்தை துவக்கினேன். அதில் முதன் முதலாக பதிவு செய்து கொண்டவர் மணீஸ்
சிசோடியா தான். முதலாவதாக வருமான வரித்துறையிலும், மின்சார துறையிலும் ஊழல்
எதிர்ப்பை துவக்கினோம். பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என
எதிர்பார்க்கவில்லை.
மோசமான அரசியல்:
ஒரு
மாநிலத்தை ஆட்சி செய்வது என்பது ஒரு சவாலான விஷயமல்ல. அதை, ஆம் ஆத்மி
சிறப்பாக செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திட்டங்கள் அனைத்தும் மத்திய
அரசு தான் தீட்டுகிறது. அதில் மாற்றங்கள் வர வேண்டும். என்னை பொறுத்த வரை
ஒரு ஆக்கபூர்வமான முதல்வராகவே செயல்பட விரும்புகிறேன். அறிவு
சார்ந்தவர்களின் வழிகாட்டுதலுடன் டில்லியில் ஆட்சியை நடத்துவேன். அரசு
பணத்தை முறையாக செலவிட்டால், மக்கள் சரியான மதிப்பெண்ணை வழங்குவார்கள்.
நாட்டில் இன்று இருக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் மோசமான அரசியலே
காரணமாகும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
முதலில் காங்.,க்கு ஆப்பு?:
ஆட்சி
பொறுப்பேற்றவுடன், ஆம் ஆத்மியின் தாரக மந்திரமான ஊழலை ஒழிப்போம் என்ற
கோஷத்தின் அடிப்படையில், கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியின் போது
நடந்த ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க உள்ளதாக, அக்கட்சி
பிரகடனப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி,
ஆதரவு கட்சி மீதான ஊழல் புகார்களை விசாரிக்க கமிஷன் நியமிப்பதாக
அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், காங்கிரஸ் மீது ஆம்ஆத்மி கட்சி நீளமான பட்டியலை தயார் செய்து வைத்துள்ளது. இதில், மின்சாரம், குடிநீர் விநியோகத்தில் நடந்த மோசடிகள் குறித்த விவகாரங்கள் தான் அதிகம் என, கூறப்படுகிறது.
மக்களை சந்திக்க முடிவு:
காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்து கெஜ்ரிவால் இன்று கூறுகையில், 'நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அக்கட்சியுடன் எந்த சமாதானமும் செய்து கொள்ளமாட்டோம், குறிப்பாக ஊழல் விசாரணை விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிரச்னை ஏற்பட்டால், மீண்டும் மக்களைத் தான் சந்திப்போம்,' என்றார்.
காங்கிரஸ் அதரவுடன் ஆட்சியில் அமரும் கெஜ்ரிவால் கட்சி காங்கிரசுக்கு எதிராக எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க முடியும், இது எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பது கேள்விக்குறியே !
Comments