கோல்கட்டா: கோல்கட்டாவில், முக்கிய சாலைகளில், சைக்கிள் ஓட்டுவதற்கு,
போலீசார் விதித்துள்ள தடைக்கு, அம்மாநில அரசு, சட்டப்பூர்வ ஒப்புதல்
அளிக்காததால், சைக்கிள் ஓட்டலாமா, கூடாதா என, பொதுமக்களிடையே, குழப்பம்
நிலவுகிறது.
போலீசார் தடை :
மேற்கு
வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி
நடக்கிறது. ஏழைகளின் பாதுகாவலராக, மம்தா, தன்னை அடையாளப் படுத்துகிறார்.
ஆனால், மாநில தலைநகரான, கோல்கட்டாவில், போக்கு வரத்து நெருக்கடி மிகுந்த,
முக்கியமான, 174 சாலைகளில், சாதாரண மக்களின் வாகனமாக கருதப்படும், சைக்கிள்
ஓட்டுவதற்கு, போலீசார் தடை விதித்துள்ளனர். மே மாத இறுதியில், இந்த தடை
விதிக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்களிடையே, கடும் எதிர்ப்பு எழுந்தாலும், போலீசார், அபராதம் விதிப்பதால், சைக்கிள் ஓட்டுவதை, பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இதுபோல் விதிக்கப்படும் தடைகள், இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். இரண்டு மாதங்களுக்கு மேல், தடையை நீட்டிக்க வேண்டுமெனில், அதற்கு, மாநில அரசின் சட்டப்பூர்வமான ஒப்புதல் தேவை. எனவே, சைக்கிள் ஓட்டுவது குறித்த, எந்த முடிவும் எடுக்க முடியாமல், கோல்கட்டா பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சட்ட நிபுணர்கள் கூறியதாவது:
போலீசாரின்
தடை, இரண்டு மாதங்களுக்கு மேல், நீடிக்காது. மாநில அரசு ஒப்புதல்
அளித்தால் தான், நீடிக்கும். எனவே, போலீசாரின் தடை, தற்போது செல்லாது.
அபராதம் விதிக்கும்நடவடிக்கையை, போலீசார், கைவிட வேண்டும். இவ்வாறு,
அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, சைக்கிள் மூலமாகவே, அன்றாட பிழைப்பு நடத்தி வரும்,
பத்திரிகை ஏஜென்டுகள், கூரியர் டெலிவரி பையன்கள், பால்காரர்கள்,
தொழிலாளர்கள் ஆகியோர், மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்சரும்,
திரிணமுல் காங்., தலைவர்களில் ஒருவருமான, மதன் மித்ராவை சந்தித்து,
சைக்கிள் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, வாபஸ் பெறும்படி
வலியுறுத்தினர்.
Comments