லாலுவின் பாதங்களை கழுவிய போலீஸ் அதிகாரி : விசாரணை க்கு மாநில அரசு உத்தரவு

ராஞ்சி: லாலுபிரசாத்தின் கால்களை கழுவிய போலீஸ் அதிகாரி மற்றும் அவரது காலனியை சுமந்து சென்ற போலீசார் மீது விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜாமினில் விடுதலை:

மாட்டுத்தீவன வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டிருந்த முன்னாள் முதல்வர் லாலு கடந்த திங்கட்கிழமை ஜாமினில்விடுதலை செய்யப்பட்டார். முதலில் கோவிலுக்கும் அதன்பின்னர் வீட்டிற்கும் செல்வதாக பயண திட்டம் வகுக்கப்பட்டது.


பயணதிட்டத்தின்படி லாலு சிறையில் இருந்து வெளியில்வந்த உடன் தேவ்ரி கோவிலுக்கும் பி்னனர் ராம்கர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள சின்னாமஸ்தா கோவிலுக்கும் சென்றார். 

காலை கழுவிய போலீஸ் அதிகாரி :

சின்னாமஸ்தாகோவிலுக்கு லாலு முயன்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி ரேங்கில் உள்ள அசோக்குமார் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் லாலுவின் கால்களை தண்ணீர் ஊற்றி கழுவினார். அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு போலீஸ்காரர் லாலு அணிந்திருந்த காலணியை தூக்கிக்கொண்டு சென்றார்.
போலீசாரின் இத்தகைய செயல்களை கண்டு காவல் துறை மற்றும் ஊடகங்கள், பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரின் இத்தகைய செயல் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட போலீசாரின் செய்கை குறித்து விசாரணை நடத்தும் படி ஜார்கண்ட் மாநில அரசு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகாரி விளக்கம்:

லாலுவி்ன் கால்களை கழுவிய டி.எஸ்.பி., அசோக்குமார் கூறுகையில் லாலு கோவிலுக்கு நுழைவதற்கு முன்னர் கால்களை கழுவதற்காக தண்ணீர் கேட்டார். அவர் தனக்கு குழந்தையாக இருந்த போது முதல் தெரியுமாதலால் அவரின் மீதான மதிப்பு காரணமாகவே அவர் பாதங்களை கழுவியதாக கூறியுள்ளார்.

Comments