உலகம் முழுவதும் உள்ள 177 நாடுகளில்
ஊழல் குறித்து ஆய்வு நடத்தியதில் ஊழல் இல்லாத நாடே இல்லை என தெரிய
வந்துள்ளது. மூன்றில் இருபங்கு நாடுகளின் நிலை மிக மோசமாக உள்ளது.
இருப்பினும் ஊழல் மிகக் குறைவாக
உள்ள நாடுகளில் டென்மார்க், நியூசிலாந்து,
பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து,
ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. ஊழல்
மிகுதியாக உள்ள நாடுகளில் சோமாலியா, வட கொரியா, ஆப்கானிஸ்தான், சூடான்,
லிபியா, ஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. இந்த
பட்டியலில் இந்திய 91வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி,
சீனா இலங்கை போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் குறைவாக உள்ளது.
பாகிஸ்தான், ரஷ்யா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் அதிகமாக
உள்ளது. சட்ட விரோத பண பரிமாற்றத்தை ஒழித்து, அரசியலில் புழங்கும் நிதி
முறைகேடுகளைத் தூய்மைப்படுத்தி, மக்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை
மீட்டு, அரசுத் துறைகள் மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படச் செய்ய
வேண்டியது மிக அவசியம்; அவசரமுமாகும்.
Comments