தி.மு.க.,வுக்கு நல்ல மரியாதை: பா.ஜ.,

சென்னை: பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்த கால கட்டத்தில், தி.மு.க.,விற்கு நல்ல மரியாதை கொடுக்கப்பட்டது என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். சென்னை, பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் அளித்த பேட்டி: பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தபோது, தி.மு.க.,விற்கு நல்ல மரியாதை கொடுக்கப்பட்டது.
தற்போதைய மத்திய அரசு நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. லோக்பால் மசோதா குறித்த தேர்வுக்குழு பரிந்துரைகளை அமைச்சரவைக்கு அனுப்பியது தவறு. அந்த மசோதாவை சமாஜ்வாடி கட்சி எதிர்த்து வருகிறது. அக்கட்சி காங்., குடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ள ஒரு கட்சியாகும். எனவே, அதை காங்.,தான் சமாதானப்படுத்தி, மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Comments