புதுடில்லி:இந்திய துணை தூதர் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என, பார்லி., விவகாரத்துறை அமைச்சர்
கமல்நாத் கூறி உள்ளார். தூதரக அதிகாரிகள் விஷயத்தில் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகளை, அமெரிக்க பெடரல் போலீசார் பின்பற்றவில்லை என, கைதான
இந்திய துணை தூதர், தேவ்யானியின் வக்கீ்ல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
விவகாரத்தில், இந்தியாவின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, தேவ்யானி கைது
நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறை
முன்வந்துள்ளது.
Comments